யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு(Photos)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தி்ல் தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் தமிழரின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல்
குறித்த நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தியாக தீபம் தீலிபனின் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவேந்தல் உரை நிகழ்த்தப்பட்டது.
மேலும் மாணவர்களினால் ஈகைசுடர் ஏற்றி மாணவர்கள் நினைவேந்தல் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தீபன்
நல்லூரில் திலீபனுக்கு அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியினரும் அஞ்சலி செலுத்தினர்.
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்துக்கு இன்று சென்ற
முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் தியாக
தீபத்துக்கு சுடரேற்றி - மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri