இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டம் நுவரெலியாவில் 55 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு இத் திட்டம் உதவும் என எதிர்பாக்கப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நுவரெலியாவிற்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான நான்கு கிலோமீற்றர் தூரத்தை இந்த திட்டம் உள்ளடக்கும் என நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அடுத்த 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், கட்டுமான நிறுவனமான அவுட்டோர் இன்ஜினியர்ஸ் ஏஜி இன்வெஸ்ட்மென்ட் மூலம் ஸ்வீடன் நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.