வர்த்தக சங்க செயலாளரை தாக்கிய ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள்
கிரிபத்கொடை வர்த்தக சங்கத்தின் செயலாளர் சிறில் பத்திரன மீது கிரிபத்கொடை கால சந்தி பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களனி பிரதேச சபை உறுப்பினர் இருவர் உட்பட ஆறு பேர் இணைந்து அவரை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்து, பின்னர் பிணையில் விடுத்துள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய மற்றைய நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என கிரிபத்கொடை வர்த்தக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கிரிபத்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தி, சந்தேக நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கியுள்ளதாக கிரிபத்கொடை வர்த்தக சங்கத்தின் தலைவர் விஜித ரோஹன விஜேமுனி குற்றம் சுமத்தியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
