பதவியை ராஜினாமா செய்யவுள்ள தமிழரசு கட்சியின் உறுப்பினர்
தமிழரசுக்கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் நாளைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சியூடாக வவுனியா நகர வட்டாரத்தில் நேரடியாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தேன்.
அந்த வகையில், வெற்றிபெற்றவர்கள் தமது பதவிக்காலத்தின் இரு வருடங்களை மேலதிக வேட்பாளர்களாக போட்டியிட்ட நபர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழரசுகட்சி தீர்மானித்திருந்தது.
எனது பதவிக்காலத்தின் இறுதி வருடத்தினை ஏனையவர்களிற்கு வழங்குவதாக நான் அன்று வாக்குறுதியளித்திருந்தேன் அதற்கமைய அவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்குடன் எனது பதவியினை ராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளேன்.
அது தொடர்பான கடிதத்தினை வவுனியா தேர்தல் திணைக்களத்திற்கு நாளையதினம் உத்தியோகபூர்வமாக வழங்கவுள்ளேன்.
தேர்தல் திணைக்களத்தால் எனது உறுப்புரிமை உத்தியோகபூர்மாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் கிடைக்கு வரை எனது வட்டாரத்தில் என்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன்.
இதுவரை காலமும் எனது பணிக்கு பக்கபலமாக இருந்து ஒத்தாசை புரிந்த நகரசபை
தவிசாளர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், வாக்காள பெருமக்களுக்கு எனது
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
