ரணிலுக்கான பகிரங்க ஆதரவை வெளிப்படுத்திய பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக பரிந்துரைப்பதற்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுஜன பெரமுன தரப்பில் கூறப்படும் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தாம் தீர்மானிக்கவில்லை என்றும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்
விக்ரமசிங்கவின் முதிர்ச்சி, சர்வதேச அனுபவம் மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் ஆகியவை, அவர் நாட்டை வழிநடத்துவதற்கு பொருத்தமானவர் என்பதற்கான முக்கிய அம்சங்கள் என்று அவர் எடுத்துரைத்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விரைவில், இது தொடர்பான கொள்கை அடிப்படையிலான தீர்மானத்தை எட்டும் என அளுத்கமகே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
இதன்படி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார், அவருடன் இணைந்து உருவாக்கப்படும் புதிய கூட்டணியில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையும் என்றும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை கவர்ந்திழுக்கும் ஜனாதிபதியின் முயற்சிகள் பற்றி கேட்டபோது, இதுவரை சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.காலப்போக்கில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
ஜனாதிபதி தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்போது இந்த பெரிய மாற்றம் நிகழும் என்றும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |