சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் - வெளிவரும் மர்மங்கள்
சுவிஸ் மலைகளில் பனி உருகி இரண்டு எலும்புக்கூடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
உடல்கள் யாருடையவை என்பதைக் கண்டுபிடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிசார். சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் பல மர்மங்களை வெளிக்கொணர்ந்துகொண்டு இருக்கின்றன.
கடந்த சில வாரங்களில் பனி உருகி இரண்டு எலும்புக்கூடுகளையும் விபத்துக்குள்ளான விமானம் ஒன்றையும் வெளிக்கொணர்ந்துள்ளது. Zermatt என்ற இடத்தில் மலையேறச் சென்ற ஒருவர் மம்மியாக்கப்பட்ட ஒரு உடலைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த அந்த நபர் அணிந்திருந்த உடையை வைத்துப் பார்க்கும்போது, அந்த உடல் 1980களிலிருந்தே அந்தப் பகுதியிலுள்ள பனியில் மறைந்து கிடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மலைகளில் பனி உருகுவதும், இப்படி உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதும் புதிய விடயம் அல்ல என்றாலும், சமீபத்தில் நிகழ்ந்துள்ள கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால், இப்போது நிலவும் அதீத வெப்பம் இருப்பது முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam