இந்திய துணை உயர்ஸ்தானிகருக்கும் சாணக்கியனுக்கும் இடையில் சந்திப்பு
இந்திய துணை உயர்ஸ்தானிகரான சத்யஞ்சல் பாண்டேவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (04.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான த.கலையரசனும், முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் சமகால அரசியல் சம்பந்தமாகவும், எமக்கு தீரா பிரச்சனையாகவுள்ள மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
