கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் - சமலுடன் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், கலையரசன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோரும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பிலான குறித்த விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
