கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
37 உறுப்பினர்களைக் கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 20 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 04 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பாக 02 உறுப்பினர்களும் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
வர்த்தமானி
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 02 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக 01 உறுப்பினரும், சுயேட்சைக்குழு சார்பாக 02 உறுப்பினர்களும் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

கரைச்சி பிரதேச சபையை தமிழரசுக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைக்கொண்டு கரைச்சி பிரதேச சபையை ஆட்சியமைத்தது.
தவிசாளராக அருணாச்சலம் வேழமாலிகிதனும் உபதவிசாளராக புஸ்பநாதன் சிவகுமார் தெரிவு செய்யப்பட்டு வர்த்தமானி வெளிவந்திருந்தது.
மேலும், இன்றைய முதல் கன்னியமர்வில் உறுப்பினர்களின் அறிமுக உரை மற்றும் கன்னி உரைகள் இடம்பெற்றன.









மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam