மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
புதிய இணைப்பு
இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் முக்கிய 4 கோரிக்கைகளை முன்வைத்தார்.
1.அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்து கொடுக்கும் வரை அவர்களுக்கான தற்காலிக வீடுகளை அமைத்து கொடுத்தல்.
2.தற்போது வசிக்கும் இடத்தில் இருந்து மாற்று இடத்துக்கு பாதிக்கப்பட்ட மக்கள் செல்லும் போது அவர்களுக்கு தொழில் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் ஆகையால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்கு அவர்களுக்கான நிதியுதவிகளை வழங்குதல்,
3.இந்திய பிரதமர் நரேந்தரமோடி இலங்கை வருகை தந்த போது இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபா மருத்துவ காப்பீடு வழங்குவதை போல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
4.OCI அட்டையை பெருந்தோட்ட சமூகத்தினர் பெற்றுக் கொள்வதில் கடினமான நடைமுறைகள் இருப்பதால் அதை இலகுப்படுத்துவதுதற்கு பிறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளி தமிழர் எனவும், அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமையால் அவற்றை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் செந்தில் தொண்டமானால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (23) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, இந்திய வம்சாவளி தமிழ் (IOT) சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தொடர்பான விடயங்கள், டிட்வா சூறாவளியின் பின்னரான அனர்த்த நிலைமைகள் மற்றும் குறிப்பாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிவிவகார ஜெய்சங்கரிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் நலன்
மேலும், இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட சந்திப்பின்போது, இந்தியாவின் ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட நான்கு முன்னுரிமை அம்சங்களை உள்ளடக்கிய ஆவணமும் ஜெய்சங்கரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், மலையக மக்களின் நலன் மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான கூட்டு முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்தும் என ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு, டித்வா சூறாவளிக்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமான முயற்சிகளில் இந்தியா மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கிடையிலான தொடர்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பில், மனோகணேசன், செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான், இராதகிருஷ்ணன், திகாம்பரம், மருதபாண்டி ரமேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan