மூதூர் பிரதேச கோவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம்
மூதூர் பிரதேச கோவிட் தடுப்புச் செயலணியின் விசேட கூட்டம் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டம் இன்று மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 05 ஆம் திகதியிலிருந்து மூதூர் பிரதேசத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையினால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியினைக் கருத்தில் கொண்டு விசேட ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது வர்த்தகர்களுக்குப் பாதகமில்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கைகள், கோவிட் தொற்றை மூதூரில் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்போது வர்த்தகர்களுக்கும் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளல் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இருந்தபோதும் சரியான தீர்மானங்கள் எட்டப்படாத காரணத்தினால் மீண்டும் இன்று மாலை 5:00 மணிக்கு விசேட கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
அத்துடன் நாளைய தினம் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரைக்கும் வியாபார ஸ்தலங்களைத் திறப்பதற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக அனைத்து வியாபாரிகள், கிராமசேவகர்கள், கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர்கள், நலன்விரும்பிகள் உள்வாங்கப்பட்டு சுகாதார முறையிலான யோசனையோடு வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கு வழி செய்த தருவதாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக் தெரிவித்துள்ளார்.
இவ்விசேட கூட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,
மூதூர் தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், மூதூர் பொலிஸ்
நிலையப்பொறுப்பதிகாரி, கட்டைபறிச்சான் இராணுவதளபதி, அரசியல் பிரமுகர்கள்,
வர்த்தக சங்கத்தினர், சுகாதார பிரிவினர் எனப் பலரும் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
