சபாநாயகருடன் முக்கிய சந்திப்பில் ஈடுபடவுள்ள சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆளும் கட்சியிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றில் ஆசனங்களின் ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் இதன்போது சபாநாயகருக்கு யோசனை முன்வைக்கவுள்ளதாகக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்வது தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகிய வண்ணவுடன், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேம ஜயந்த மற்றும் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் ஏனைய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இன்றைய சந்திப்பில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
