சீரற்ற காலநிலை தொடர்பில் வவுனியாவில் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
வவுனியாவில் (Vavuniya) கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்று (28.11.2024) காலை கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்புக்கள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வெள்ளப் பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு அரச உத்தியோகத்தர்கள் கடினமாக பயணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், வெள்ளப்பாதிப்பு விடயத்தில் வவுனியா மாவட்ட செயலகம் விரைவான நடவடிக்கைகளை எடுத்திருந்தது என்றும், அந்தவகையில் இனமத பேதம் என்ற விடயம் இங்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியூதீன், காதர்மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், து.ரவிகரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம் மற்றும் அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், வலயக் கல்விப்பணிப்பாளர்கள், பொலிஸார், இராணுவத் தரப்பு உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |