மன்னாரில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடல்
ரைட் டு லைப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சுயதொழில் முனைவோர் மற்றும் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் வாழ்வுதயம் கேட்போர் கூடத்தில் நேற்று (20) இடம்பெற்றது.
இந்த நிகழ்வு எதிர்வரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் முதலுதவி மையத்தின் ஊடாக செய்யவிருக்கும் செயற்பாடுகள் மற்றும் சுய முயற்சியாளர்களை ஊக்குவித்தல், ஊடகவியலாளர்களுடன் இணைந்து சமூக செயற்பாட்டாளர்களை இணைத்து செயல் பாடுகளை செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகள் முதலுதவி மையத்தின் ஊடாக இணைந்து செயல்படும் சட்டத்தரணிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்வரும் காலங்களில் அனைவரையும் இணைத்துக் கொண்டு சுயதொழில் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான பல விடயங்களை மேற்கொள்வதற்கான ஒரு ஆயத்த ஆலோசனை நிகழ்வாக இது இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரைட்டு லைப் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பிலிப் திஸ்ஸாநாயக்க, சட்டத்தரணி துலான், திட்ட இணைப்பாளர்கள் துனித் மற்றும் பிரசாந்தன், மன்னார் மாவட்ட முதலுதவி மையத்தின் இணைப்பாளர் டிலக்சன் மற்றும் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் பிரதான பங்காளர்களான சுய தொழில் முயற்சியாளர்கள் ,ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











