எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ் தேசியப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று(18.12.2025) இச்சந்திப்பு இரவு 10.15 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 40 நிமிட நேரம் நடைபெற்றுள்ளது.
எழுத்து மூலம் கையளிப்பு
இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்களும் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் கலந்துகொண்டார்.

தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP, பொ.ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்), செ.கஜேந்திரன் (செயலாளர் ததேமமு), த.சுரேஸ் (தேசிய அமைப்பாளர்), க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி), ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam