கிழக்கு மாகாண ஆளுநருக்கும் புதிய கடற்படை தளபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(6.2.2026) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பாதுகாப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
அபிவிருத்திப் பணிகள்
மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் அவசர கால அனர்த்தங்களின் போது கடற்படையினரால் வழங்கப்படக்கூடிய ஒத்துழைப்புகள் மற்றும் சிவில் சமூகத்திற்கும் கடற்படைக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.

கடலோரப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஒத்துழைப்பு
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவுக்கு ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், மாகாணத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின் முடிவில், இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.



சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam