மத்திய மாகாண வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

Johnston Fernando Mahindananda Aluthgamage Central Provincial Road Development
By Independent Writer Oct 20, 2021 10:16 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

கண்டி நகரத்தையும் அதனை அண்டிய வீதி வலையமைப்பையும் அபிவிருத்தி செய்து பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலற்ற நகரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மீளாய்வுக் கூட்டம் ஒன்று நெடுஞ்சாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது. 

நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மத்திய மாகாண காரியாலயம் இணைந்து செயல்படுத்தியுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. 

இந்த கூட்டமானது ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (Johnston Fernando), மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் நெடுஞ்சாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றிருந்தது. 

இதன்போது கண்டி நகரத்தை அடிப்படையாகக் கொண்டு கடும் நெரிசலைக் குறைப்பதற்காக பாதைகளை விரிவுபடுத்துதல், பாதசாரிகள் சுரங்கப்பாதைகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அவற்றில் அதிகமானவை செயற்படுத்தப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மத்திய மாகாணத்தின் பொறுப்பான பணிப்பாளர் அனைவருக்கும் விளக்கியுள்ளார். 

மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை இணைக்கும் கெடம்பே சந்தியில் மேம்பாலம் அமைப்பதை துரிதப்படுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பேராதனை சந்தியில் இருந்து கன்னொருவ சந்தி வரையான பாதையை 4 வழிப் பாதையாக அபிவிருத்தி செய்தல் அந்த வீதியிலுள்ள பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைத்தல், ஹீரஸ்ஸகல சந்திப்பை அகலப்படுத்துதல், பூவெலிகட சந்திப்பை அகலப்படுத்துதல் மற்றும் வெல்ஸ் பார்க் சந்திப்பை அகலப்படுத்துதல் ஆகியவை நிறைவடையும் நிலையில் உள்ளன.

கண்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு பாலம் அமைக்க முன்மொழியப்பட்டது.

மேலும், 2021 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் கீழ், வில்லியம் கோபல்லவ மாவத்தை மேம்பாடு, பரிகம - ஹலொலுவ வீதி அபிவிருத்தி, அலதெனிய ஈரியாகம வீதி மேம்பாடு, கட்டுகஸ்தோட்டை - கலகெதர வீதி வழிப்பாதையாக அபிவிருத்தி செய்தல், லூயிஸ் பீரிஸ் வீதி அபிவிருத்தி, தர்மராஜா வித்யாலயாவிலிருந்து தென்னேகும்பூர வரையிலான வீதிஅபிவிருத்தி, பேராதனை-ஹல்ஓவிட்ட கட்டுகஸ்தோட்டை வீதி, துதுகேமுனு மாவத்தை அபிவிருத்தி, 2வது ராஜசிங்க மாவத்தை அபிவிருத்தி, கெலிஓயா வீதி 4 பாதைகளின் கீழ் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும்.

சுதுஹம்பொலவிலிருந்து தென்னேகும்பூர வரை முன்மொழியப்பட்ட கண்டி சுரங்கப்பாதை திட்டம் மற்றும் பொதுஹெரா முதல் கலகெதரா வரையிலான நடுத்தர அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணம் குறித்து அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.

இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். 

இலங்கை மற்றும் லெபனானுக்கு மட்டுமே டாலர் பற்றாக்குறை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார முகாமைத்துவத்தில் பலவீனம் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

டொலர்களை அச்சிட முடியாது. இந்த தொற்று நோயால் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இந்த பொருளாதாரத்தில் உலக வங்கி எத்தனை மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது? வெளிநாட்டவர் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.

பில்லியன் கணக்கான டொலர்கள் நம் நாட்டுக்கு வருவது தடைப்பட்டுள்ளது, எனவே நாங்கள் இதை கவனமாக கையாண்டோம். மக்களை பட்டினியில் விடவில்லை.

பொருட்களின் விலைகள் ஏதோ ஒரு வகையில் அதிகரித்தன. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த கோவிட் தொற்று நோயால் இந்த நெருக்கடிகள் அனைத்தும் எழுந்தன.

இவை மிகவும் தற்காலிகமான விஷயங்கள். எதிர்க்கட்சிகள் தற்காலிக கோசங்களை முன்வைக்கின்றன. அரிசி, சீனி எரிவாயு மற்றும் எண்ணெய் பிரச்சினைகள் தற்காலிகமானவை. இவை தற்காலிகப் பிரச்சனைகளாக நாம் பார்க்கிறோம்.

எரிபொருள் விநியோகத்தை ரூ 121 இல் வைத்திருப்பதன் மூலம் இந்த அரசாங்கம் மக்கள் மீது சுமையை ஏற்றியதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாட்டலி கணக்குகளை கூறலாம். ஆனால் பாட்டலியின் புள்ளிவிவரங்களை மக்கள் ஏற்கவில்லை. அதனால் தான் அவர்களின் அரசு தோற்கடிக்கப்பட்டது. மக்கள் அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டால் அந்தக் கதைகள் செல்லுபடியாகும்.

இவ்வாறு கதை சொல்லி நாட்டில் ஒரு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதனால் தான் எதிர்க்கட்சி தனது தொழிற்சங்கத் தலைவர்களை பயன்படுத்தி நாட்டில் எண்ணெய் தட்டுப்பாடு என்று பிரச்சாரம் செய்கிறது.

ஒரு கட்டத்தில் மக்கள் வரிசையில் எண்ணெய் பெற காத்திருந்தார்கள். இத்தகைய நெருக்கடிகள் உருவாக்க முயன்றாலும் இப்போது நாட்டு மக்களுக்கு அது பற்றி தெரியும். இந்த அரசாங்கம் மக்களை சுரண்டாது என்று நாங்கள் தெளிவாக கூறுகிறோம்.

இந்த அரசாங்கத்தின் தலைவர் மத்திய வங்கியில் இருந்து பணத்தை திருடவில்லை. அவர் முன் வந்து ஊழல் இல்லாத நாட்டை ஆள உழைக்கிறார். எனவே, இந்த நெருக்கடிகள் அனைத்தும் தற்காலிகமானவை என்று நாங்கள் தெளிவாக கூறுகிறோம்.

பசளை பிரச்சனையால் பயிரிட முடியாதுள்ளதாக விவசாயகள் கூறுகின்றனர். இது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

அத்தகைய பஞ்சம் வராது என்று நாங்கள் தெளிவாக கூறுகிறோம். எதிர்க்கட்சிகளுக்கு தான் பஞ்சம் வருகிறது. ஜே.வி.பி விவசாயிகளைக் கொன்ற கட்சி. கமநல நிலையங்களை எத்தனை டிராக்டர்களை தீ வைத்தனர்? எங்கள் அரசாங்கத்தின் முக்கிய பலம் விவசாயிகள் என்பதை அவர்கள் அறிவார்கள்.

அவர்கள் இந்த சிறுபான்மை கட்சிகளுடன் ஒன்றிணைந்து பொய்யான கருத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் விவசாயிகளை விரும்பும் குழுவல்ல.

அவர்களே விவசாயிகள் அழிவதை பார்க்க விரும்புகிறார்கள். விவசாயப் பகுதிகளில் உள்ள மக்கள் பிரேமதாஸவையோ திசானாயக்கவையோ ஆதரிப்பதில்லை.

அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகியவை நாங்கள் பாரிய வெற்றி பெற்ற பகுதிகள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடனத்தில் சிறுநீரக நோய் தொடர்பான கொள்கைகளைக்கு அமையவே இந்த பசளை விடயம் முன்வைக்கப்பட்டது, அவர்கள் உண்மையிலேயே நாட்டு மக்களை நேசித்தால் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். அமைச்சர் மஹிந்தானந்தவின் சுவரொட்டிளை ஜேவிபி தவிர வேறு யாரும் தயாரிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசியலமைப்புடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், 

தடுப்பூசி கொண்டு வர முடியாது என்றார்கள். தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. ஆனால் அவற்றை ஏற்ற அனுமதிக்கவில்லை.

காலை இழுத்தாலும் நாங்கள் எமது வேலை செய்ய ஆரம்பித்தோம். கடந்த ஒன்றரை வருடமாக தேவையான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எங்கள் வாக்குறுதிகளை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்டுவதற்கு முன், அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி நினைவூட்டினார்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை. நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு பிரேமதாசாவும் சொல்கிறார். தேர்தலுக்கு நாங்கள் பயப்படவில்லை.

தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தது அவர்கள் தான். நாங்கள் எப்படியும் தேர்தலுக்கு பயப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US