ஜனாதிபதி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இடையில் நாளை சந்திப்பு!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் ஒன்றினை செயல்படுத்துதல் தொடர்பில், ஜனாதிபதி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள்
இந்த கலந்துரையாடலில், மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பிலும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், பொதுவாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
அதேவேளை, நாளை ஆகஸ்ட் 5ம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியின் தூதுக் குழுவிலும் பொதுவான தேசிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவோம்”என தெரிவித்துள்ளார்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
