ஜனாதிபதி மற்றும் நீதித்துறை முக்கியஸ்தர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நீதித்துறையின் முக்கியஸ்தர்கள் இடையே இன்று (01) மாலை சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
முக்கிய சந்திப்பு
நீதிபதிகளின் ஊதியம், ஓய்வூதியம், கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் நீதித்துறை அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட நீதிபதிகளின் முக்கிய தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் பலர் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நீதித்துறை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர், கோட்டை நீதிபதி பசன் அமரசேன உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
நீதித்துறை அதிகாரிகள் சங்கம் என்பது உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் தொழில்முறை அமைப்பாகும்.
அதற்கு மேலதிகமாக நீதித்துறை சேவை ஆணைக்குழு பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.