அநுராதபுர சிறுமி பாலியல் துர்நடத்தைக்குள்ளாக்கப்பட்டதற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்
அநுராதபுரத்தில் மதகுரு ஒருவரால் சிறுமியொருவர் பாலியல் துர்நடத்தைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (01) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் போராட்டம்
நாட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், குற்றவாளிகளுக்கு தராதரம் பாராமல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்ப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது ''பிக்குவே உனக்கு பிணை ஒரு கேடா, காவி உடைக்கும் சட்டம் வேண்டும், தனி நீதிமன்றம் தப்பிக்கும் நாடகமா'' போன்ற வாசகங்கள் தாங்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
முன்னதாக குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான கையெழுத்துக்களும் பெறப்பட்டிருந்தது.





ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri