சபாநாயகருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரொன்று ஆரம்பிக்கப்படும் போது மேற்கொள்ளப்படும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இதன்போது கேட்டறிந்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் ஜனநாயகம், மனித உரிமைகள், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Today I met with Speaker of Parliament Mahinda Yapa Abeywardena. In a wide-ranging discussion, we spoke about the vital role the legislature plays as a pillar of democratic governance and the importance of broad consultation in the legislative process. pic.twitter.com/3tKR72COkP
— Ambassador Julie Chung (@USAmbSL) February 8, 2024