எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் கடற்றொழில் அமைப்புக்கள் கலந்துரையாடல்
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளுக்கும் அகில இலங்கை கடற்றொழிற்சங்க நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது
இந்த சந்திப்பு நேற்றையதினம் (29.06.2023) இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர் இது தொடர்பாக இரண்டு அமைப்பினரும் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
சட்டவிரோத கடல் அட்டை பண்ணை
இதன்போது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பாக தென்பகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வடக்கு பகுதி மற்றும் கிழக்கு பகுதி கடற்றொழிலாளர்களுக்கும் ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கை கொண்டு செல்வதற்காக இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக கருத்து தெரிவித்தனர்.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கடல் அட்டை பண்ணைகளால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடலுக்கு பாரிய தாக்கம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வாழ் உயிரினங்களும் கடலுக்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர்.
இதன் தாக்கம் பத்து வருடங்களுக்கு மேல் காணப்படும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு அரசாங்கம் மக்களின் பிரச்சனையை சர்வேச நீதிமன்றத்தில் தீர்ப்பதை விரும்பாத நிலையில் எக்ஸ்பிரஸ் பேள் கப்பலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்துள்ளது.
இரு தரப்பும் கலந்துரையாடலிலும் எக்ஸ்பிரஸ் போல் கப்பல் காரணமாக சூழலுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக வழக்குகளை கொண்டு செல்வதற்காக விடையங்களும் ஆராயப்பட்டதாக ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 8 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
