“உனக்கு பைத்தியமா”? என்று கேட்டவருக்கு 24 லட்சம் ரூபா அபராதம்! ‘
கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஒஸ்திரேலிய திறந்தநிலை டென்னிஸ் போட்டியில் வீரர் ஒருவருக்கு 12ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் உலகின் 2-ம் நிலை டென்னிஸ் வீரரான ரஸ்யாவின் டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
எனினும் இந்த போட்டியின் போது மெட்விடேவ் நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்காக அவருக்கு 12 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அபராதமாக அவுஸ்திரேலிய டென்னிஸ் சங்கம் தீர்மானித்துள்ளது.
நடுவரை நோக்கி , “உனக்கு பைத்தியமா? நீ என்ன முட்டாளா?... அரையிறுதியில் எப்படி இவ்வளவு மோசமாக இருக்க முடிகிறது” என்று அவர் கூச்சலிட்டார்.
இருப்பினும், போட்டி முடிவடைந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பை கோரினார்.



ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam