பொருளாதார நெருக்கடியின் கோரம்! இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்
பாம்பு கடித்தவருக்கு வழங்கப்படும் மருந்து இல்லாததன் காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஏழாம் திகதி தனது வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மாணவனை பாம்பு கடித்துள்ளது.
தந்தையின் தகவல்
இதனையடுத்து பெற்றோர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் அங்கு பாம்புகடிக்கான மருந்து இருக்கவில்லை என மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஒரு மருந்தை கொடுத்தனர் ஏனைய மருந்துகள் எங்கே என கேட்டபோது இல்லை என தெரிவித்துவிட்டனர்.
மருந்து பற்றாகுறையால் எனது மகனை இழந்துவிட்டேன் என தந்தை கவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சேவைகளின் கட்டணங்கள் கடுமையாக உயர்வடைந்துள்ளன.
இந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் பாரிய அளவில் நாட்டில் காணப்படுவதுடன் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் பல உயிர்களை பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.



