நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம்
நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நிபுணத்துவ மருத்துவரும் அரசியல் செயற்பாட்டாளருமான சமால் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நகிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் அரச மற்றும் தனியார் துறைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூடுதல் தொகையை செலவிட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மருந்தகங்களில் ஏற்கனவே சில மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலை நீடித்தால் 2022ம் ஆண்டில் ஏற்பட்டது போன்று மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடைமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென டொக்டர் சமால் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார்.