கொழும்பு துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவப் பொருட்கள்
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஏற்றுமதிக்கான ஆவணங்களில் கையொப்பமிடுவதில் தாமதத்தை ஏற்படுத்தியதால், கொழும்பு துறைமுகத்தில் மருத்துவப் பொருட்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தனியார் துறையின் விநியோகத்தை பாரியளவில் பாதிக்கும் என மருந்து விநியோக நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம்: ஏற்பாடுகள் குறித்து ஐ.நாவிடம் ஜீவன் தொண்டமான் விளக்கம் (Photos)
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதி
துறைமுகத்தில் இருந்து மருந்துகளை வெளியில் எடுத்துச் செல்வதற்கான அனைத்து ஆவணங்களிலும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கையொப்பமிட வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் போலியான மருந்துகள் எடுத்து வரப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை அடுத்தே இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலிலேயே கொழும்பு துறைமுகத்தில் மருத்துவப் பொருட்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |