உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் கூறியுள்ள விடயம்
கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படுவது குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களிடமிருந்து நோய் பரவும் நிலை குறைவாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் கேட் ஓ பிரையன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மைய தடுப்பூசிகள் நோயைத் தடுப்பதில் மற்றும் நோயின் தீவிரத்தை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தடுப்பூசி போடுவதால் 100 சதவீதம் மக்கள் பாதுகாக்கப்படுவதாக அர்த்தமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு நோய்க்கும் எதிராக எந்த தடுப்பூசியும் அத்தகைய பாதுகாப்பைத் தராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.