அங்கவீனமுற்ற நபர்களை தினசரி பராமரிப்பு நிலையத்தில் சேர்ப்பதற்கான மருத்துவ பரிசோதனை
ஒவ்வொரு மாவட்டத்திலும் தினசரி பராமரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பின்படி, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் நடுவூற்று கிராம சேவகர் பிரிவில் சமூக சேவைத் திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையில் தினசரி பராமரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட உள்ளது.
இந்த தினசரி பராமரிப்பு மையத்தில் சேர்க்க உள்ள ஆறு மாதம் முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் தேர்ந்தெடுக்க மருத்துவ பரிசோதனை நேற்று (16) கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக சேவைத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளரின் வழிகாட்டுதலிலும், கிண்ணியா பிரதேச செயலரின் தலைமையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

கிண்ணியா பிரதேசச் செயலாளர் பிரிவிலிருந்து 50 மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூதூர், தம்பலகாமம், திருகோணமலை பட்டினமும் சூழலும் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலிருந்து 50 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 100 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலின்படி, பேச்சு சிகிச்சை, மற்றும் உடலியக்க சிகிச்சையாளர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு ஆறு மாதம் முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை பரிசோதித்து, தினசரி பராமரிப்பு மையத்தில் சேர்க்க தகுதியானவர்களைத் தேர்வு செய்தது.

இந்த நிகழ்வில் வளவாளராக உரையாற்றிய சமூக சேவை நலன்புரி போதனாசிரியர், மருத்துவ பரிசோதனைகள் மூலம் இந்தக் குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை தினசரி பராமரிப்பு மையத்தில் சேர்ப்பதன் மூலம், அவர்களை அடுத்த கட்டத்துக்கு மேலும் பலப்படுத்த சமூக சேவைத் திணைக்களம் உதவ முடியும் என்று தெரிவித்தார்.
மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.
வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
மேலும், சமூக சேவைத் திணைக்களமும் மாற்றுத்திறனாளிகள் சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பல சாதனைகளையும் வெற்றிகளையும் எட்ட முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இன்றுமுதல் கிண்ணியா, மூதூர், தம்பலகாமம், திருகோணமலை பட்டினமும் சூழலும் மற்றும் சுற்றியுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள இந்தக் குழந்தைகள் “எமது குழந்தைகள்” என கருதப்படுவார்கள் என்றும், அவர்களின் பராமரிப்பு சமூக சேவைத் திணைக்களத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர், கிண்ணியா பிரதேச செயலகத்தின் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைத் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

