வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு இலங்கையின் நாடாளுமன்றம் வழங்கிய அங்கீகாரம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளை அங்கீகரிக்கும் வகையிலான மருத்துவ சட்டத் திருத்த யோசனை இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த அங்கீகாரத்தின் கீழ், உலகளாவிய தரவரிசையில் உள்ள, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளை இலங்கை அங்கீகரிக்க உதவும் என்று இலங்கையின் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்
இதன்படி உலக தரவரிசையில் முதல் 1000 மருத்துவக் கல்லூரிகளை இலங்கை அங்கீகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு மருத்துவக் கல்லூரி
வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து தகுதி பெற்ற சுமார் 300 இலங்கை மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் தகுதி பெற்ற மருத்துவக் கல்லூரிகளை இலங்கை அங்கீகரிக்காததால் அவர்கள் இலங்கையில் பணியாற்ற முடியாத நிலை உள்ளது.
இந்த புதிய சட்டமூலத்தின் மூலம் அவர்கள் இலங்கையில் பணிபுரிய முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சத்திரசிகிச்சை நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்களின் வெற்றிடங்களுக்கு தீர்வு காண இது வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |