ஊடக நிறுவன பிரதானிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இலங்கையில் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகளுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய தினம் (15) அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் ஊடகங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அதாவது தேர்தல் குறித்து உறுதிபடுத்தாத தகவல்களை வெளியிடுவது மற்றும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
