வவுனியாவில் நாளை முதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளைய தினம் (07.07) வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காமினி மகாவித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
அத்துடன், தாண்டிக்குளம், சோயா லேன், குடியிருப்பு, ஏ9 வீதி உள்ளிட்ட வவுனியா நகரின் வடக்கு கிராம அலுவலர் பகுதி மற்றும் வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவு என்பவற்றைச் சேர்ந்த 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு காமினி மகாவித்தியாலயத்தில் மதியம் 1 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறும்.
எனவே, இப்பகுதியைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமது அடையாள அட்டையுடன் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
