வவுனியாவில் மலேரியா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
வவுனியாவில் (Vavuniya) அண்மையில் சில நாட்களாக மலேரியா நோய் தடுப்பு செயற்றிட்ட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக சாந்தசோலைப் பகுதியிலுள்ள வீடுகள், கிணறுகள், சுற்றுப்பகுதிகள் என்பனவற்றில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்ட நடவடிக்கை
இந்தியாவின் ஐயப்ப மலைக்குச் சென்று திரும்பிய பக்தர்களிடம் மலேரியா நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் அவ்வாறு இருப்பின் சமூகத்தில் பரவாமல் இருப்பதற்காகவும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மேலும், பொதுமக்கள் தமது இருப்பிடங்களைத் சுத்தம் செய்து வைத்திருக்குமாறும் தமது பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டால் அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இந்தடவடிக்வடிக்கைக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam