யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்ட நில அளவீடு(photos)
யாழ்ப்பாணத்தில் காரைநகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் எதிர்ப்பால் காணி சுவீகரிப்பிற்கான அளவீடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காணி
காரைநகர் தெற்கு பகுதி j/44 கிராம அலுவலர் பிரிவில் உள்ள மடத்துவெளியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் சொந்த காணியை, கடற்படையினருக்கு அளப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை தளத்தினை விஸ்தரிப்பு செய்வதற்காக சுமார் 11 ஏக்கர் அளவிலான அந்த காணியினை அளவிட நேற்று காலை 9 மணியளவில் நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்துள்ளனர்.

இடைநிறுத்தம்
அரசியல் பிரமுகர்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்த நில அளவீட்டுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும், எதிர்ப்பு தெரிவித்தவர்களின் எழுத்துமூலமான ஆவணத்தினை திணைக்களத்தினர் பெற்றுக் கொண்டதுடன் இந்த நடவடிக்கை முறியடிக்கபட்டுள்ளது.

இதனையடுத்து நில அளவீடு செய்வதற்காக வந்த திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாப மரணம் |
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri