யாழில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி மீண்டும் முறியடிப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக மீண்டும் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (25.07.2023) காலை 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்கள பணியாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்துள்ளனர்.
உரிமையாளர் எதிர்ப்பு
அவர்களை தடுத்து காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் இது எங்களுடைய சொந்த காணி. இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நில அளவை அதிகாரியால் தனக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றினை தருமாறு கூறப்பட்ட நிலையில் காணி உரிமையாளர், வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், காணி உரிமைக்கான மக்கள் இயக்க உரருப்பினர் இரத்தினசிங்கம் முரளிதரன், வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி கனைச்செல்வன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வசந்தகுமார் ஆகியோர் ஒப்பமிட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்பு நடவடிக்கை
இதனையடுத்து, குறித்த காணி அளவீடு செய்வதை நிறுத்திவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர். இதேவேளை வடமராட்சி கிழக்கில் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் கடற்படைக்கு காணி சுபீகரிப்பு நடவடிக்கைகள் இடம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுவீகரிக்கப்படவிருக்கின்ற அனைத்து காணிகளும் தனியாருக்கு சொந்தமானது என்று மக்கள் தெரிவிக்கின்றனர் இன்றையதினம் கபிரியேல் பிள்ளை செல்வரத்தினம் என்பவருக்கு சொந்தமான 15. பேச்சஸ் காணியே அளவீடு செய்யும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
