மயிலத்தமடு போராட்டக்களத்தில் வன்முறை ஏற்படக்கூடிய பதற்றமான சூழல்: சுகாஷ் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
மயிலத்தமடுவில் இருந்து துரத்தப்பட்ட 990க்கும் அதிகமான பண்ணையாளர்கள் உடனடியாக மீளவும் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு திரும்பி அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழி வகுக்க வேண்டும் என தாம் இந்த இடத்தில் கோரிக்கை விடுப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மயிலத்தமடு போராட்டக்களத்தில் வன்முறை ஏற்படக்கூடிய ஒரு பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மயிலத்தமடுவில் இன்றையதினம் (08.10.2023) இடம்பெற்றுவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உறவினர் வீட்டுக்கு சென்ற பொலிஸ் அதிகாரி மீது துரத்தி துரத்தி துப்பாக்கி சூடு : சினிமா பாணியில் சம்பவம்
பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மயிலத்தமடுவிலிருந்து விரட்டப்பட்ட தமிழ் பண்ணையாளர்களுக்கு நீதி கோரியும், ஜனாதிபதி ரணிலுடைய விஜயத்தின் போது மட்டக்களப்புய பண்ணையாளர்களதும் எமதும் எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாங்கள் இங்கே கூடி இருக்கின்றோம்.
மக்களுடைய ஜனநாயகக் குரல்வளையை அடக்குவதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இராணுவத்தினர் பேருந்து பேருந்தாக கொண்டு வந்து இறக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
இங்கு வன்முறை ஏற்படக்கூடிய ஒரு பதற்றமான சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆனால் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.
போராட்டம் தொடரும்
அவர்கள் போராடுவது அவர்களுடைய ஜனநாயக உரிமைக்காக. நாங்கள் போராடுவது அந்த மக்களுடைய ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்காக. எத்தகைய அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் எங்களுடைய போராட்டம் தொடரும்.
நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்ற விடயம் மயிலத்தமடு பால் பண்ணையாளர்களுடைய வாழ்வாதாரம், பூர்வீக காணிகள் மீளவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
