கால்நடைகளுக்கு ஏற்படும் அவலநிலை : மயிலத்தமடுவில் இடம்பெறும் அராஜகம் (Video)
மட்டக்களப்பு - மயிலத்தமடுவில் பண்ணையாளர்களின் கால்நடைகள் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில், இன்றையதினமும் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வெட்டு காயங்களுக்கு உள்ளாகி மாடு ஒன்றும் கொல்லப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கால்நடையின் உரிமையாளரான பண்ணையாளர் ஒருவர் இது தொடர்பில் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் மயிலத்தமடு பண்ணையாளர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை தவிர வேறு தீர்வு இல்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர்கள் பாராமுகமாக செயற்படுவதாகவும் ஜனாதிபதி எங்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக கால்நடைகள் மீது நடாத்தப்படும் தாக்குதல்களினால் பாரிய இழப்புகளை தாங்கள் எதிர்கொண்டுவருவதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தாங்கள் சொல்லொன்னா துன்பத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளர்.
இதேநேரம் 79நாட்களாக இன்றைய தினமும் அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேற்றக்கோரி மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - குமார்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri