மயிலத்தமடு- மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் மயிலத்தமடு- மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கான தீர்வினை விரைவாக பெற்றுக்கொடுக்க அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு,மாதவனை பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது மகாவலி ஊடாக கால்நடைபண்ணையாளர்களுக்கு காணி ஒதுக்கீடுசெய்வது தொடர்பில் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஆராயப்ப்பட்டது.
வழக்கு தாக்கல்
அத்துடன் தற்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது குறித்து இங்கு பண்ணையாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது அவ்வாறான அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை ஒரு குறித்த காலப்பகுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றி கால்நடை பண்ணையாளர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைககள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக வன இலாகாவினர் இந்த விடயங்களில் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் பட்டிப்பளை,மயிலத்தமடு போன்ற பகுதிகளில் காடுகளை வெட்டி அத்துமீறிய பயிர்ச்செய்ககைளை முன்னெடுக்கும்போது அது தொடர்பில் நடவடிக்கையெடுப்பது இல்லையெனவும் சாதாரண நபர்கள் இவ்வாறு செய்தால் வழக்குகளை தாக்கல் செய்வதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri