லங்காசிறியின் ஊடக அனுசரணையில் மே தின விளையாட்டு விழா: திறமைக்கான மற்றுமொரு களம்
லங்காசிறி ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையில், மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் 13ஆவது முறையாக நடத்தப்படும் வருடாந்த மே தின விளையாட்டு விழா நாளைய தினம் கொழும்பு - 11 செட்டியார்தெருவில் நடைபெறவுள்ளது.
மேற்படி போட்டிகள் மலையகத்தை அடையாளப்படுத்தும் சர்வதேச விளையாட்டு வீராங்கனைகள் இருவர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்ச்சியில், மரதனோட்டம், கேரம் போட்டி, 100 - 200m அஞ்சலோட்டம் கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் ஏற்பட்டு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்த போட்டிகள் மூலம் பெறப்படும் நிதியானது நேரடியாக மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சென்றடையும் என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கலை கலாசார நிகழ்வுடன் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகளை எமது லங்காசிறி முகப்புத்தக தளத்தில் நேரலையாக(lankasri TV) பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.