ராஜபக்சவினரை அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்
ராஜபக்சவினரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும் என சுகாதார சேவைகள் தொழிற்ச கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெறும் தொழிற்சங்கங்களில் மே தின ஊர்வலத்தில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொழிற்சங்கங்களில் மே தின ஊர்வலத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.திருடர்களை விரட்டுவோம், மீண்டு வருவோம் என்ற தொளிப்பொருளில் இந்த மே தின ஊர்வலத்தை நடத்துகிறோம்.
உழைக்கும் மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றிணைய வேண்டும். அரசியலில் தமது வயிற்று பிழைப்பை நடத்தும் முறையே இருக்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியேறுமாறு கோரி அகிம்சையான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால், அவர்களை நாங்கள் விரட்ட வேண்டியுள்ளது. உழைக்கும் மக்கள் என்ற வகையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் எமது சம்பளத்துடன் எமது வாழ்க்கை போராட்டம் இறுக்கமடைந்துள்ளது.
எனினும் நாட்டை வழமை நிலைமைக்கு கொண்டு வரும் பொறுப்பு உழைக்கும் மக்களுக்கு இருக்கின்றது. நாட்டை மீட்பதற்காக உழைக்கும் மக்களான நாம் ஒன்றிணைய வேண்டும். இதுதான் தற்போது எமது போராட்டம் என ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.



