தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கொண்டாட்டங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின்(NPP) மே தினக் கொண்டாட்டங்கள் இம்முறை காலிமுகத் திடலில் நடைபெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, அதன் பொதுமக்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் மேதின வைபவங்களை பிரமாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மே தின ஊர்வலம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் டில்வின் சில்வா, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் மேதின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதற்காக ஒவ்வொரு உள்ளூராட்சி மன்ற வட்டாரங்களில் இருந்தும் குறிப்பிடத்தக்க ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து வர ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது.
எனினும் தேசிய மக்கள் சக்தியின் வழமையான மே தின ஊர்வலம் இம்முறை நடைபெற மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.