தேசபந்து தென்னக்கோனைச் சந்தேகநபராகப் பெயரிட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிப்பு
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை, காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபராகப் பெயரிடுவதை மற்றும் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் (24.04.2023) விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் மே 9ஆம் திகதி, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் தேசபந்து தென்னக்கோனை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த விடயத்தை, நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு, தேசபந்து தென்னக்கோன் மனுவொன்றின் மூலமாக கோரியிருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு
இதனைப் பரிசீலித்த நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம்.ஏ.ஆர்
மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இந்த இடைக்கால தடை
உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri