மே9 போராட்டம்! மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமைச்சரவை ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை
மனித உரிமை மீறல்களை தடுக்கும் வகையிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளது.
மனித உரிமைகளை மீறும் வகையில் இடம்பெறக்கூடிய அனைத்து வகையான வன்முறைகளையும் தடுக்கும் பூரண அதிகாரமுடைய ஜனாதிபதி ஆணைக்குகுழு நிறுவப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மே9 போராட்டம்
கடந்த ஆண்டு மே மாதம் 9ம் திகதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டம் இடம்பெற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் இந்த ஆணைக்குழு நிறுவுகை தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு
தாங்கள் விரும்பும் மதத்தை, விரும்பிய அரசியலை, விரும்பிய கலாச்சாரத்தை தழுவிக் கொள்ள அரசியல் சாசனத்தில் காணப்படும் உரிமை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எனவே வன்முறைகளை கட்டுப்படுத்தக் கூடிய பூரண அதிகாரமுடைய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.