மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பின்னர் கொலை அச்சுறுத்தல்கள்..! சமூக செயற்பாட்டாளர் வெளிப்படுத்திய உண்மைகள்
17ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் மே 18 அன்று இடம் பெற்ற நிலையில், கொழும்பில் சில இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை எரித்து, அவதூறான வார்த்தைகளால் விமர்சித்திருந்தமையானது பேசுபொருளாகியிருந்தது.
இந்தநிலையில், தற்போது பல்லேகம தேரர் விவகாரம் தீவிரமாக பேசப்படும் அதனை பற்றி பேசாத தரப்பினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக மட்டும் பேசவது ஏன் என்ற கேள்வியை சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் எழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பின்னர், தனக்கு நேரடியாக கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இன அல்லது மத அடிப்படையிலான இரட்டை அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..