இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை (Photos)
கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் இந்திய மீனவர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம், 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறப்படும் 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
பருத்தித்துறை மீனவர்களிடம் இருந்து இந்திய மீனவர்களை மீட்ட கடற்படை அவர்களை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
அந்த 21 மீனவர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இன்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam