தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று (21) உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள்
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து, வருடந்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை.
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசம் அனைத்தும் தயாராகி வருகின்றது.
கார்த்திகை மாதம் 21 ம் திகதி முதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்படுவதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி: ஆசிரியர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




