முல்லைத்தீவு மாவீரர் நாள் எழுச்சி இடத்தில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கிடையில் குழப்பம் (Video)
முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரர் நாள் எழுச்சி இடத்தில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மாவீரர் நாளாக கார்த்திகை 27 ஆம் நாள் திங்கட்கிழமை வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகி வரும் நிலையில் பொலிஸார் பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரர் நாள் எழுச்சி இடத்திற்குள் திடீரென நுழைந்த பொலிஸார் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடப்பட்ட சிவப்பு,மஞ்சள் கொடிகளை உடனடியாக அகற்றுமாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸாரின்
கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான அனைத்து
ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் அச்சமின்றி வருகை தந்து மாவீரர் நாள் நிகழ்வில்
கலந்துகொள்ளுமாறு பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.




உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
