மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்: புறப்பாட்டு வரி நீக்கம்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை (MRIA) சர்வதேச அளவில் ஊக்குவிக்கும் நோக்கில், அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் விமான நிலையப் புறப்பாட்டு வரியை (Departure Tax) முழுமையாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி பயணிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த 60 அமெரிக்க டொலர் (USD 60) வரி இனி அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரி நீக்க நடவடிக்கை நாளை முதல் 2026 ஜூன் 26ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை
மத்தள விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்கும், அங்கிருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை ஒரு பிரதான போக்குவரத்து மையமாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே இதன் பிரதான இலக்காகும்.
தற்போது இந்த விமான நிலையம் குறைந்தளவிலான விமானச் செயற்பாடுகளையே கொண்டுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் இந்த வரிச் சலுகை அதன் பொருளாதார ரீதியான மீட்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
ரூ.2.35 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க கிரீடம்: புகைப்படம் எடுக்க முயன்று தட்டிவிட்ட சிறுவன்: வீடியோ News Lankasri