மத்தள சர்வதேச விமான நிலைய திட்டம் மீள்பரிசோதனையில்..!
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை இரண்டு இந்திய-ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்காக தெரிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனம் மோசமான காரணங்களுக்காக அமெரிக்காவினால் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கை நிபந்தனைகள்
அத்துடன், இந்த விடயம் குறித்த நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து பல கேள்விகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்நிறுவனத்துடனான இலாபப் பகிர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகள் இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து அமைச்சகம் ஒரு விரிவான மதிப்பாய்வை நடத்தி, அதன் ஆய்வு முடிவுகளை அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
அதேவேளை, தற்போது, மத்தல விமான நிலைய நடவடிக்கைகள், விமான நிலையம், விமான சேவைகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
