அச்சுறுத்திய மத்துகம சான்..! செவ்வந்தியுடனான தொடர்பில் திடுக்கிடும் தகல்கள்

CID - Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Drugs
By Shrikanth Oct 28, 2025 02:23 PM GMT
Report

இலங்கையில் பெரும் தொகை போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக 'மத்துகம சான்' பெயர் பெற்றவர். அவரின் பெயர் செவ்வந்தியின் கைதின் பின்னர் சமூகத்தில் பேசப்பட்டது.

அத்தோடு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கொலை மீரட்டலில் அவரின் பெயர் அடிப்பட்டது.இப்போது அவர் டுபாயில் வசித்து வருகிறார்.

இவருக்கு சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த 'மத்துகம சான்

 'மத்துகம சான்' 43 வயதான இவர் மத்துகம பகுதியில் பாதாள குழு செயற்பாடுகளில் பெயர் பெற்றவர்.இவர் அரசியல் பலத்தால் செய்த பல குற்றச் செயல்களால் அவர் பெருவாரியாக பேசப்பட்டார்.

அச்சுறுத்திய மத்துகம சான்..! செவ்வந்தியுடனான தொடர்பில் திடுக்கிடும் தகல்கள் | Mathugama San Ishara Sewwandi Drugs

வட்டிக்கு பணம் கொடுத்தல் மற்றும் கப்பம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்.சான் பொதுஜன பெரமுன அரசியல் கட்சிக்கு பெரும் விருப்பம் கொண்டிருந்தார்.களுத்துறை மாவட்டத்திற்கு பாதாள குழுச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தியவர்.

கௌரவமான குடும்பம்

வீட்டில் ஒரே பிள்ளையான அவர் பெரும் செல்வந்தர் இல்லாவிட்டாலும் மத்துகமவில் பெயர் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.சமீபத்தில் மத்துகமவில் பாதாள உலக செயற்பாடுகள் நடைபெற்றாலும் பல தசாதங்களுக்கு முன்னரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மத்துகமவை அண்டிய பகுதிகளில் இருந்துள்ளனர்.

அச்சுறுத்திய மத்துகம சான்..! செவ்வந்தியுடனான தொடர்பில் திடுக்கிடும் தகல்கள் | Mathugama San Ishara Sewwandi Drugs

அந்த குழுவினருடன் தொடர்பில் இருந்த மஞ்சு என்பவர் சானின் காதலியுடன் தொடர்பு வைத்திருந்ததாக இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டது.மஞ்சு,சானின் பாடசாலை நண்பராவார்.

அதன் பின்னர் மஞ்சு சுட்டுக் கொல்லப்பட்டார்.மஞ்சுவை கொலை செய்தவர் யார் என்று தெரியாவிட்டாலும் சானின் பெயரே அடிப்பட்டது.2009 ஆம் ஆண்டு மஞ்சுவின் படுகொலைக்கு சந்தேகத்தின் பேரில் சானும் அவர்களின் நண்பர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சான் சிறையில் இருக்கும் போது அவரின் உறவினரான புத்திக என்பர் சானின் இடத்தை பிடிப்பதற்கு முயற்சித்த போது சான் சிறையில் இருந்தவாறு தீட்டிய திட்டத்தில் புத்திக சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு...! கல்வி அமைச்சின் இறுதி முடிவு

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு...! கல்வி அமைச்சின் இறுதி முடிவு

அரசியல் தொடர்புகள்

சான் சிறையில் இருந்து விடுதலையாகிய போது 2010 ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற்றது.சான் அவரின் நண்பர்களுடன் மத்துகம பகுதியின் பிரபல அரசியல்வாதியுடன் சேர்ந்து தேர்தல் கடமைகளில் ஈடுபட்டார்.

அந்த அரசியல்வாதி தேர்தலில் வெற்றிப் பெற்று அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டு பின்னர்,அவரின் அமைச்சிலுள்ள ஒரு நிறுவனத்தில் சானுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அச்சுறுத்திய மத்துகம சான்..! செவ்வந்தியுடனான தொடர்பில் திடுக்கிடும் தகல்கள் | Mathugama San Ishara Sewwandi Drugs

அதில் இருந்த சான் எல்ஆர்சி காணியில் 20 ஏக்கரை பெற்றுக் கொண்டு தேயிலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டார். அதன் பின்னர் சான் மற்றும் அவர்களின் நண்பர்கள் அரசியல் பலத்தால் பாதாள உலகின் பெரும் புள்ளிகளாக மாறினர்.

அத்தோடு அரசியல் செயற்பாடுகளான போஸ்டர் ஒட்டுதல், கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கல் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பாதுகாப்பில் ஈடுபட்ட இவர்கள் மத்துகம பொலிஸ் அதிகாரிகளையும் அறிந்து கொள்கின்றனர்.

திடீரென நாவற்குழிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி! சுற்றிவளைக்கப்படும் ஜே.கே பாயின் தொடர்புகள்

திடீரென நாவற்குழிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி! சுற்றிவளைக்கப்படும் ஜே.கே பாயின் தொடர்புகள்

அவர்களுக்கு கிடைத்த அரசியல் பலத்தால் வட்டிக்கு பணம் கொடுத்தல் மற்றும் வியாபாரிகளிடம் கப்பம் வாங்குதல் ஆகியவற்றை செய்தனர். சானும் அவர்களின் நண்பர்கள் இருவரும் தனித்தனியாக தங்களின் பலத்தை காட்ட முயற்சித்த சமயத்தில் மத்துகம நகரம் பெரும் குழப்பத்திற்குள்ளாகியது.சானுக்கு பயணிகள் போக்குவரத்திற்கான மூன்று பேருந்துகளும் இருந்துள்ளது.

தலைமறைவான சான்

அரசியல் மாற்றத்தின் பின்னர் அவர்களின் பலம் இழக்கப்பட்டது.அரசியல் பலத்தால் மூடி மறைக்கப்பட்ட அவர்களின் வழக்குகள் திரும்ப எடுக்கப்படுவதை உணந்தார்கள்.அதன் போது சான் கொழும்புக்கு செல்ல தீர்மானிக்கிறார்.

தனது பிள்ளைகளை கொழும்பிலுள்ள பாடசாலைக்கு சேர்த்தார்.அதன் பின்னர் அவரை காணவில்லை என சானின் மனைவி பொலிஸில் முறைப்பாடும் செய்கிறார்.ஆனால் அவர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியாது.

சூடு பிடிக்கும் செவ்வந்தி விவகாரம்! ஐரோப்பாவில் சிக்கப்போகும் தமிழர்கள்

சூடு பிடிக்கும் செவ்வந்தி விவகாரம்! ஐரோப்பாவில் சிக்கப்போகும் தமிழர்கள்

தனக்கு அரசியல் பலம் இல்லாததால் வெளிநாட்டில் இருப்பது பாதுகாப்பு என நினைத்தார். அதன் பின்னர் அவர் தொடர்பான எந்த தகலும் இருக்கவில்லை.மத்துகம நகரில் சான் நடத்தி சென்ற வியாபார நிலையத்தை சிலர் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர்.

அந்த குழுவில் தனது நண்பர்கள் இருவரும் இருப்பதாக அறிந்த சான், அசங்க என்ற நண்பரின் வீட்டுக்கு அவரின் சிலரை ஆயுதங்களுடன் அனுப்பினார்.அச்சந்தர்ப்பத்தில் பயத்தில் அசங்கவின் மனைவி 'எனது கணவரை கொல்ல வேண்டாம் என கத்தினார்' அப்போது அசங்க பிள்ளைகளுடன் ஒளிந்து கொள்கிறார்.

கோபத்தில் அவர்கள் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்கின்றனர். செவ்வந்தியின் கைதியின் பின்னரே சானின் பெயர் வெளிவந்துள்ளது.

கனேமுல்ல சன்ஜீவ கொலையில் சானுக்கும் தொடர்பிருப்பதாகவே விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சான் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன. 

அச்சுறுத்திய மத்துகம சான்..! செவ்வந்தியுடனான தொடர்பில் திடுக்கிடும் தகல்கள் | Mathugama San Ishara Sewwandi Drugs


 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US