இலங்கை கிரிக்கட் வீரருக்கு வழங்கப்பட்ட விருது
இலங்கை கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு இந்தியாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் ( Behindwoods Gold Icon) விருது வழங்கும் நிகழ்வில் மதீஷவிற்கு இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கட் வீரர்கள், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கட் வீரர்களுக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024ம் ஆண்டுக்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரமாக மதீஷ பத்திரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரபலமான விளையாட்டு நட்சத்திரம்
மதீஷ, இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஹைன்ட்வுட்ஸ் விருது வழங்கும் விழாவில் சினிமா, விளையாட்டு பல்வேறு துறைகளில் பிரகாசித்தவர்களுக்கு விருது வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரமாக மதீஷ பத்திரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
